கோவையில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் கஞ்சா விற்பனை - 3 வாலிபர்கள் கைது

கோவை துடியலூர் அருகே அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் மூவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் அனைத்து பகுதிகளிலும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் துடியலூர் அடுத்த கே.என்.ஜி புதூர் பிரிவு அருகே குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அப்போது தப்பிக்க முயன்ற மூவரையும் போலீசார் மடக்கி பிடித்து, விசாரணை நடத்தினர். அதில் பிடிபட்டவர்கள் துடியலூரை சேர்ந்த ராம்நாத் (31), குருடம்பாளையம் ராம் விகாஷ் குமார் (30) மற்றும் என்.ஜி.ஓ காலணியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (30) என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் வெவ்வேறு பணிகளை செய்து கொண்டு அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...