கோவையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அண்ணனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தம்பி கைது..!

மேட்டுப்பாளையம் அடுத்த திம்மம்பாளையம் புதூர் பகுதியில் குடும்ப தகராறில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிதிநிறுவன அதிபரான ரங்கராஜை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அவரது தம்பி குபேந்திரன் கைது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை, திம்மம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (67). நிதி நிறுவன அதிபரான இவருக்குமனைவி கமலா, மகள் சவிதா,மகன் கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

இதில் மகள் சவிதா திருமணமாகி அதே கிராமத்தில் கணவர் வீட்டில் வசித்து வருகிறார். ரங்கராஜுக்கும் அவரது மனைவி கமலாவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு விவாகரத்து பெற்றுள்ளனர். இதனால் ரங்கராஜ் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதேபோல சிறுமுகை பழத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜனின் சகோதரர் குபேந்திரன்(57). இவர், லிங்கபுரம் பகுதியில் உள்ள பவானிசாகர் நீர்த்தேக்கம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து திம்மம்பாளையம் புதூர் பகுதியில் உள்ள தனது அண்ணன் ரங்கராஜ் வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக குபேரந்திரன் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல், கடந்த சனிக்கிழமை இரவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.பின்னர் தூங்கச் சென்றுள்ளனர். இருப்பினும் ஆத்திரம் தாங்காத குபேந்திரன் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரங்கராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து குபேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...