கோவை கிணத்துக்கடவு அருகே உயர் ரக போதைபொருள் விற்பனை - இருவர் கைது

கிணத்துக்கடவு ரயில் நிலைய சாலையில் உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்துவந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார், கிஷோர் அகமது ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ரயில் நிலைய சாலையில் போதை பொருள்மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கிணத்துக்கடவு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் முந்தினம் இரவு ரயில் நிலைய சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து சோதனை செய்தனர்.



இந்த சோதனையில் அவர்களிடம் உயர்ரக போதை மாத்திரை மற்றும் போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதன் பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் கிஷோர் அகமது என்பது தெரியவந்தது.

பின்னர் இருவரிடம் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...