தொண்டர்களின் ரத்தத்தாலும், சதையாலும் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக - திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன்

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் துணை சபாநாயகரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சிஜெயராமன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, அதிமுக இயக்கத்தைப் பொறுத்தவரை தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தலைவர்கள் செயலாளர்கள் என அனைவரும் வருவார்கள் போவார்கள் ஆனால் இயக்கம் என்றைக்கும் அசைக்க முடியாத இயக்கமாக உள்ளது.

அதற்கு ஒரே காரணம் தொண்டர்களின் ரத்தத்தாலும் சதையாலும் வியர்வையாலும் உருவான இயக்கம் தான் அதிமுக. மேலும் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் ஒரு மகளிரணி, ஒரு பாசறை, தொழில்நுட்ப பிரிவு மற்றும் அந்த பகுதியில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் கொண்ட குழுவாக இருக்க வேண்டும்.

அமைக்கப்படுகின்ற பூத் கமிட்டி மிகத் தெளிவாக இருக்க வேண்டும். கட்சியை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து திமுகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.கட்சியில் இணைந்தவர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் கட்சித் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்று அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், சிவசாமி, பழனிச்சாமி, நடராஜன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...