வானதி சீனிவாசனை பெண் சிங்கம் என பாராட்டிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி..!

வானதி சீனிவாசன் எழுதிய தடையென்றுமில்லை என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, வானதி ஒரு பெண் சிங்கம் என பாராட்டினார்.


கோவை: கோவை சித்ரா அருகே உள்ள பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் எழுதிய ”தடையொன்றுமில்லை” புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிகலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் எச்.ராஜா, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில்சிறப்புரையாற்றிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, வானதி ஒரு பெண் சிங்கம்.கமல்ஹாசனை தோற்கடித்ததற்காக வானதியை நான் பெண் சிங்கம் என்று அழைக்கவில்லை.

ஒரு தொலைக்காட்சி மேடையில் கமலுடன் தனது விவாதத்தை நினைவு கூர்ந்து,தொலைக்காட்சி விவாதத்தில் எளிதில் தோற்கடிக்கப்படும் ஒருவர் தேர்தல் போரில் அதிக சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்.

"தடையொன்றுமில்லை” புத்தகத்தின் பக்கங்களில், இளம் வானதி கண்டுபிடிக்கப்படுவதைக் காணலாம். தனக்காக எழுந்து நிற்கும் நெருப்பு.வானதி ஒரு கிராமத்தில் குழந்தையாக வளர்ந்தபோது எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும் தோல்விகளை வெற்றியின் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தியுள்ளார்.

பெண்கள் தாங்கள் கல்வி கற்கும் போது எந்த தொழிலை மேற்கொள்ள வேண்டும் அல்லது இல்லத்தரசிகளாக இருக்க வேண்டும் என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பெண்களுக்கு எப்படி அதிகாரம் அளிப்பது, பெண்களுக்கு எப்படி அதிகாரம் அளிப்பது என்று மக்கள் அடிக்கடி பேசுகிறார்கள். ஆனால், பெண்மையை நாம் பலருக்கு மறுவரையறை செய்ய வேண்டும்.

ஒரு பெண் பிறக்கும் போது, அவளைப் படிக்க வைக்க விரும்பும் குடும்பத்தின் அன்பால் அவள் ஆசீர்வதிக்கப்படட்டும். பெண்களை குழந்தை பருவத்தில் நம்மை பார்த்துக் கொள்வது போன்றுஅவள் வயதாகும்போதும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மகளாக, மனைவியாக, தாயாக மதிக்கப்பட வேண்டும். இந்த ஆசீர்வாதங்களுடன் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அதிகாரத்துடன் வாழ்வார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசியதாவது, வானதி சீனிவாசனை 30 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். பாஜகவில் பெண்களுக்கு எப்போதும் ஒரு பங்கு உண்டு. பாஜகவில் சமுகநீதி உண்மையில் உள்ளது.

மற்ற கட்சிகள் இப்போதுதான் பேசி கொண்டு இருக்கிறார்கள். தமிழக மக்களிடம் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜகவிற்கு தடையென்றுமில்லை.

கோவை மக்களுக்கு பாஜகவின் மீது ஈர்ப்பு உள்ளது. இளைஞர்கள் புத்தகம் படிப்பது இல்லை, மீம்ஸ்களை படித்து பேசும் அளவிற்கு இளைஞர்கள் இப்போது இருக்கின்றனர். புத்தகங்களை திருமணங்களில் பரிசாக கொடுங்கள் .

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,புத்தகத்தின் தலைப்பு தடையென்றுமில்லை, ஆனால் வானதி முழுக்க முழுக்க தடைகளை தாண்டி வந்தவர். வானதியிடம் முக்கியமான குணம் பிடிவாதம்.

ஸ்மிரிதி இரானியும் பிடிவாதம் பிடித்தவர் தான். அவரும் தேர்தலில் தோற்றவர், தோற்றவரை தோற்கடிக்காமல் விடமாட்டார். கமல்ஹாசனை வானதி தோற்கடித்தார், ஸ்மிருதி இராணி கமல்ஹாசனை தொலைக்காட்சி விவாதத்தில் கதறவிட்டவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவர்வானதி சீனிவாசன், அரசியலில் சாதிக்க என் பெற்றோரும் , கணவரும் , மகன்களும் முக்கிய காரணம். என்னை நல்வழி படுத்திய முக்கிய தலைவர்கள் மேடையில் அமர்ந்துள்ளார்கள்.

இது சுயசரிதை கிடையாது என்னுடைய அனுபவங்களை புத்தகங்களில் வெளியிட்டுள்ளோம். வீட்டில் உள்ள பெண்களும் அரசியலில் சாதிக்க முடியும் என்றால் நாம் அதற்கான நேரத்தை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும். பாஜக பல்வேறு வாய்ப்புகளும், பொருப்புகளும் எனக்கு கொடுத்துள்ளது. கொடுத்தும் வருகிறது.

பாஜகவில் உழைக்கும் ஒவ்வொருவர்களையும் தலைமை கூர்ந்து கவனித்து வரும். அதற்கு நான் தான் எடுத்துக்காட்டு. பதவி, பொறுப்பு என்பதை தலைக்கு ஏற்றாமல் மக்களுக்கு பணி செய்ய வேண்டும்.

பிரதமர் மோடிதான் ரோல்மாடல். பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைய ஊக்குவிப்பதற்காக இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...