"மாணவர் சமுதாயம்தான் நாட்டின் தூண்கள்" கற்பகம் பொறியியல் கல்லூரியின் 18 - வது பட்டமளிப்பு விழாவில் மாணவ , மாணவியருக்கு பட்டங்களை வழங்கி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் உரை.
கோவை: கற்பகம் பொறியியல் கல்லூரியின் 18 - வது பட்டமளிப்பு விழா 15.10.2022 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது கற்பகம் கல்வி நிறுவனர்களின் தலைவர் முனைவர் இராச. வசந்தருமார் தலைமையாற்றினார்.
கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் கே.முருகையா முன்னிலை வகித்தார். இந்த விழாவிற்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். ஜி. இரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ , மாணவியருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர்தம் உரையில் ”மாணவர் சமுதாயம்தான் நாட்டின் தூண்கள்” என்பதைக் குறிப்பிட்டார். இளங்கலை பட்டப் படிப்பில் 962 பேரும் முதுநிலை பட்டப் படிப்பில் 74 பேரும் பட்டம் பெற்றனர். துறைவாரியாக சிறந்து விளங்கிய ஒருவருக்குதங்கப் பதக்கம்வழங்கி கெளரவம் செய்யப்பட்டது.
இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர். விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர்தமயந்தி, கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.