கிணத்துக்கடவு பள்ளியில் மாணவர்கள் தினத்தை கொண்டாடும் விதமாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள கிட்ஸ் பார்க் பள்ளியில் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.


கோவை : மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாள் மாணவர்கள் தினமாக நேற்று கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள கிட்ஸ் பார்க் பள்ளியில் மாணவ மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது.



ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ , மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கண்டுபிடிப்புகளை கண்காட்சியாக வைத்திருந்தனர்.

மேலும் தமிழ் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பனை மற்றும் தென்னை ஓலைகளில் செய்யப்பட்ட கைகடிகாரம், குடை, விசிறி ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டது .



மேலும் பாரம்பரிய உணவான கம்பு ,கோதுமை, கூழ் வகையும் தானிய வகைகளும் மற்றும் தமிழ் கவிஞர்களின் கவிதைகளும் இந்த கண்காட்சியில் மாணவர்கள் வைத்திருந்தனர். இந்த கண்காட்சிகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் பார்த்து ரசித்துச் சென்றனர்.

இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் டி.எல். சிங் மற்றும் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...