நகர்‌ நல மருத்துவமனைகளுக்கு வருபவரிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் - ஆய்வுக்‌ கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர்

நோயாளிகளிடம்‌ கனிவுடன்‌ பேசி நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால்‌, அப்பகுதியில்‌ சிறப்பு மருத்துவ முகாம்களை உடனடியாக நடத்திட வேண்டும் என்று நகர் நல மருத்துவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் அறிவுறுத்தல்‌.


கோவை: நேற்று கோவையில் நடைபெற்ற நகர்‌ நல மருத்துவமனைகளின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்த,மாவட்ட ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ மாநகர பகுதிகளில்‌ செயல்படும்‌ நகர்‌ நல மையங்களுக்கு வரும்‌ நோயாளிகளிடம்‌ கனிவுடன்‌ பேசி அவர்களுக்குத்‌ தேவையான சிகிச்சைகள்‌ அளித்திட அறிவுறுத்தினார்.

மக்களைத்‌ தேடி மருத்துவ முகாம்களை மாநகரம்‌ முழுவதும்‌ சிறப்பு கவனம்‌ செலுத்தி நடத்திடவும்‌, காய்ச்சல்‌ உள்ளிட்ட நோய்த்‌ தொற்றுகள் ஏற்பட்டால்‌ அப்பகுதியில்‌ சிறப்பு மருத்துவ முகாம்களை உடனடியாக நடத்திடவும்‌ மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர்,கடந்த மாத காலத்தில்‌ ராஜவீதி, ரத்தினபுரி உப்பிலிபாளையம்‌, ஆர்‌.கே.பாய்‌, துடியலார்‌ உள்ளிட்ட மகப்பேறு மருத்துவ மையங்களில்‌ 50 மேற்பட்ட மகப்பேறுகள்‌ நடைபெற்று தாயும்‌, சேயும்‌ நலமுடன்‌ உள்ளனர்‌.

இதேபோல்‌, மற்ற மகப்பேறு மருத்துவ மையங்களிலும்‌ சிறப்பான முறையில்‌ மகப்பேறு சிகிச்சைகள்‌ மேற்கொள்ளவும்‌, சித்த மருத்துவமனைகளில்‌ நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர்‌ உள்ளிட்ட சித்த மருத்துவ பொருட்களை தேவையான அளவு இருப்பில்‌ வைத்திட வேண்டும்.



BCU மருந்துகளை குடியிருப்பு பகுதிகளில்‌ உள்ள தொட்டிகளில்‌ ஊற்றிடவும்‌, கொசு புகை மருந்துகளை அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும்‌ தொடாந்து அடித்திட பணியாளர்களுக்கு அறிவுறுத்திட வேண்டும்.

லேப்‌ டெக்னீசியன்‌ காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடவும்‌, நகர்‌ நல மையங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பில்‌ வைத்திட வேண்டுமெனவும்‌, மழைக்காலம்‌ என்பதால்‌ சிறப்பு கவனமுடன்‌ பணியாற்றிட வேண்டுமென மருத்துவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ அறிவுறுத்தினார்‌.

இக்கூட்டத்தில்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, உதவி நகர்‌ நல அலுவலா்‌ மரு.மாணிக்கவேல்‌, மற்றும்‌ மருத்துவர்கள்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...