கோவைக்கு வருகை தரும் ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி தலைமையில், கோவை நேரு நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று கோவைக்கு வருகை தரவுள்ளார். விமானம் மூலம் கோவைக்கு வரும் ஆ.ராசாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்க விமான நிலையத்தில் திமுக சார்பில்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆ.ராசா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகர பாஜக மகளிரணி சார்பில், நேரு நகர் பகுதியில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக மாநில பாஜக இளைஞரணி செயலாளர், பிரீத்தி லட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 20க்கும் மேற்பட்ட பாஜக மகளிரணியினர் திரண்டு ஆ.ராசா எம்.பி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், ஆ.ராசா தொடர்ந்து இந்து சமுதாயத்தையும், இந்து பெண்களையும் இழிவாக பேசி வருவதாக குற்றம் சாட்டினர்.
இதனிடையே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
பாஜக மகளிரணியினரின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.