கோவை விளாங்குறிச்சி அருகே ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி - மாவட்ட எஸ்.பி-யிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு

விளாங்குறிச்சி அடுத்த கரட்டுமேடு பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்கள் 22 பேர் வாங்கிய நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம், ராணி செல்லமுத்து ஆகியோர் சொந்தம் கொண்டாடுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளனர்.


கோவை: கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 22 பேர் கோவையை அடுத்த விளாங்குறிச்சி, கரட்டுமேடு பகுதியில் 1.95 ஏக்கர் நிலத்தை கடந்த 1985 ஆம் ஆண்டு கிரயம் செய்து வாங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த நிலத்திற்கு ராமலிங்கம் மற்றும் ராணி செல்லமுத்து ஆகியோர் சொந்தம் கொண்டாடி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நிலம் வாங்கியவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு அடிப்படையில் ராமலிங்கம் மற்றும் ராணி செல்லமுத்து ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தை சொந்தம் கொண்டாடி அடியாட்களுடன் வந்து மிரட்டல் விடுப்பதாக நில உரிமையாளர்கள் மீண்டும் கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.



பாதிக்கப்பட்டவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நிலத்தை அபகரிக்கும் முயற்சி மற்றும் மிரட்டல் விடுத்தது தொடர்பாக கோவில் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சரி வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ராணி செல்லமுத்து, அவரது மகன் பிரவீன், ராமலிங்கம் மற்றும் சாந்தலிங்கம் ஆகியோர் அடியாட்களுடன் வந்து நிலத்தில் அத்து மீறி நுழைந்து கம்பி வேலிகளை ஜே.சி.பி.கொண்டு அகற்றிவிட்டு, தகாத வார்த்தைகளால் மிரட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் உள்ளனர்.

மேலும் சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய நிலத்தை தற்போது அரசியல், பண செல்வாக்கை பயன்படுத்தி சொந்தம் கொண்டாடி மிரட்டுகின்றனர். எனவே வயதான காலத்தில்எந்த பின் புலமும் இல்லாத எங்களது சொத்தை பாதுகாக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...