கோவையில் இந்தி திணிப்பு, பொது நுழைவுத் தேர்வை கண்டித்து திமுக சார்பில் பிரதமருக்கு புறா மூலம் தூதுவிட்டு நூதன ஆர்ப்பாட்டம்.

இன்று தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: இந்தி திணிப்பு, நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று தமிழகம்முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து, கோஷங்களை எழுப்பினர். இந்தி திணிப்புக்கு எதிராகவும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதமருக்கு இந்தி திணிப்பை கண்டித்தும், ஒரே பொது நுழைவு தேர்வைதிரும்ப பெற வலியுறுத்தியும், புறா மூலம் தூதுவிடும் விதமாக புறா பறக்கவிடப்பட்டது.



இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் பேசியதாவது, இந்தியாவின் ஒற்றுமையையும், பண்பாட்டையும் சிதைக்கும் அரசாக பாஜக அரசு உள்ளது. மொழி, கலாச்சாரம், பண்பாட்டை கொண்ட நாட்டை மாற்றி இந்தி தான் இந்தியா என்று பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.



ஒன்றிய பாஜக அரசு உடனடியாக இந்த கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இது மாபெரும் வெற்றி போராட்டமாக மாறி உள்ளது. மொழி திணிப்பால் ஏற்படும் புரட்சியின் வெற்றி போராட்டமாகவும் இது அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...