கோவை சூலூர் சின்னக்குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு - விளையாடச் சென்ற போது பரிதாபம்

பள்ளி முடிந்த பின்னர் குளத்தில் குளிக்க முற்பட்ட சஸ்வந்த்(8), அகிலன் (10), சஞ்சீவ் (7) என்ற மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சூலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரைச் சேர்ந்தவர்கள் சஸ்வந்த்(8), அகிலன் (10), சஞ்சீவ் (7) இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.



வழக்கமாக பள்ளி முடிந்து வந்த பின், சூலூர் சின்னக் குளக்கரையில் விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அதேபோல, இன்று மாலை மூவரும் குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென குளத்தில் குளிக்க முற்பட்ட போது குளத்தில் தவறி விழுந்த மூவரும் கூச்சலிட்டதாக தெரிகிறது. அப்போது அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிறுவர்களை பார்த்துள்ளார். உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டு அந்த இடத்திற்கு சென்று சிறுவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால், அந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வதற்குள் மூன்று சிறுவர்களும் குளத்தில் மூழ்கினர்.



இது குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மூவரது உடலையும் மீட்டு உடனடியாக சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் மூவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குளத்தில் விளையாடச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சூலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...