கோவை க.க.சாவடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.25,680 பறிமுதல்…!

க.க.சாவடி போக்குவரத்து துறை சோதனை சாவடியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்பி திவ்யா தலைமையில், சோதனை மேற்கொள்ளப்பட்டது.


கோவை: இன்று தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கோவை க.க.சாவடி பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து துறை சோதனை சாவடியில் கோவையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் சோதனை செய்யபட்டு வந்தது.

இங்கு வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்பி திவ்யா தலைமையில், ஆய்வாளர்கள் பரிமளா, லதா உள்ளிட்ட போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

மாலை 5 மணிக்கு துவங்கிய இந்த சோதனையானது 7.30 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.25,680 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் உதவியாளர் யுவராஜ் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் சோதனைச் சாவடியில் இருந்த கணக்கில் வராத ரூ.25,680-ஐ பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...