கோவை வேளாண் பல்கலை., நிகழ்ச்சியில் பா.ஜ.க மாவட்ட தலைவருக்கு மேடையில் இடம் - தந்தை பெரியார் திராவிட கழகம் கண்டனம்…!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்ற நிலையில், மேடையில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி -க்கும் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என்று தபெதிக கோரிக்கை வைத்துள்ளது.



கோவை: பா.ஜ.க மாவட்ட தலைவருக்கு அரசு நிகழ்ச்சியில் மேடையில் இருக்கை வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று "உழவர்கள் கூட்டம்" நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



அரசு விழாவான இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியும் வந்திருந்தார்.



அவருக்கும் நிகழ்ச்சி மேடையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் பிரதிநிதியாக இல்லாமல், ஒரு கட்சி சார்பில் கலந்து கொண்டவருக்கு பல்கலைக்கழகம் எப்படி மேடையில் இடம் கொடுத்தது என்று பல்வேறு அமைப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சரும், மாநில அமைச்சரும் கலந்து கொண்டிருக்கின்ற விழாவில், மேடையில் எந்த அரசுப் பொறுப்பிலும், இல்லாத கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் உத்தம ராமசாமி அமர்ந்துள்ளார்.

இதை அரசு விதிகள், பல்கலைக்கழக விதிகள் அனுமதிக்கின்றதா? அரசு விழாவில் ஒரு அரசியல் கட்சியின் விழாவாக மாற்றிய பல்கலைக்கழக நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசு உடனடியாக இந்தப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு விழாவில் மேடையில் பிஜேபி மாவட்ட தலைவரை அனுமதித்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...