கோவை புல்லுக்காடு பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை செய்த நபர் கைது

புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்த காஜா உசைன் (23) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் கோவை மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. குறிப்பாக, தனிப்படை அமைத்து ரோந்து சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனர்.

நேற்று, புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், பெரியகடை வீதி போலீசார், விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சோதனையில், சட்ட விரோதமாக போதை மாத்திரை விற்பனை செய்த காஜா உசைன் (23)

என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் மீது, போதைப்பொருள் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைக்காக வலி நிவாரணி உள்ளிட்ட மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பல் மீதும், மாத்திரை சப்ளை செய்வோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...