இன்று ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாமில், வீட்டுமனை, உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரிடம் முன் வைத்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வாரம் திங்களன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அவரவர் பகுதியில் உள்ள பிரச்சனைகள் அல்லது தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து மனுவாக மனுவாக ஆட்சியரிடம் மனுவாக வழங்குவர்.
மக்கள் குறைதீர்ப்பு நாளன்று கூட்டத்தில் நின்று மாற்றுத்திறனாளிகள் அவர்கள் மனு அளிப்பதில் பல்வேறு சிரமங்களை சந்திப்பதால், மாற்றுத்திறனாளிகள் மனுவை பெறுவதற்கு என்றே இன்று சிறப்பு குறை தீர்ப்பு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற முகாமில், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் என அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள், வீட்டு மனை பட்டா, மருத்துவ உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து மனுவாக அவர்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக குறை தீர்ப்பு முகாம் நடத்தியதால், மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.