கோவில்பாளையம் அருகே போலீசார் சோதனை செய்த போது, பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் கஞ்சா விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
கோவை: கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞர் ஒருவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டு வந்தனர்.
விசாரணையில், அவர், கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.
இளம் வயதில் கஞ்சா வியாபாரியாக மாறியுள்ள பொறியியல் கல்லூரி மாணவனை, கோவில்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் கைது செய்தார். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இளம் வயதினரை குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்கப்படும் நிலையில், கல்லூரி மாணவரே ஒருவர் கஞ்சா விற்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.