கோவையில் கஞ்சா விற்ற பொறியியல் கல்லூரி மாணவன் கைது..!

கோவில்பாளையம் அருகே போலீசார் சோதனை செய்த போது, பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் கஞ்சா விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.



கோவை: கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞர் ஒருவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டு வந்தனர்.

விசாரணையில், அவர், கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

இளம் வயதில் கஞ்சா வியாபாரியாக மாறியுள்ள பொறியியல் கல்லூரி மாணவனை, கோவில்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் கைது செய்தார். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இளம் வயதினரை குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்கப்படும் நிலையில், கல்லூரி மாணவரே ஒருவர் கஞ்சா விற்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...