தமிழக - கேரள எல்லையில் கஞ்சா விற்க, அன்னூருக்கு கஞ்சா வாங்க வந்த மூன்று பேர் கைது; 12 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சாவை வாங்கிச் செல்ல அன்னூர் பகுதிக்கு சிலர் வர உள்ளதாக அன்னூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடைபெற்ற வாகன சோதனையில், இருவர் கைது செய்யபட்டு, 12 கிலோ கஞ்சா, சுற்றுலா வேன் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக - கேரள எல்லையான மாங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், அதற்காக வேறு பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கிச் செல்ல அன்னூர் பகுதிக்கு சிலர் வர உள்ளதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அன்னூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மேட்டுப்பாளையம் சாலை ஜே ஜே நகர் பகுதியில் நீண்ட நேரமாக டூரிஸ்ட் வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று அங்கிருந்த மூன்று பேரைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வேனில் சோதனை செய்த போது, அதில் இருந்த பையில் கிலோ கணக்கில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்டவர்களில் ஒருவர் கேரளவை சேர்ந்த சதீஷ்குமார் (34) தோட்ட வேலை செய்து வருகிறார். அவர், தமிழக கேரள எல்லையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் இவர் மீது கேரள மற்றும் தடாகம் காவல் நிலையங்களிலும் கஞ்சா வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும், இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த நல்லசாமி, என்பவருடன் சேர்ந்து கிலோ கணக்கில் கஞ்சாவை வாங்கிச் செல்ல அன்னூர் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் வேனை ஓட்டி வந்த தடாகம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (33) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.



அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா, டூரிஸ்ட் வேன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...