ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடிப்படைதிறன் உள்ளிட்ட கல்வித் திறன்களை மேம்படுத்தும் விதமாக கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது 81 தொடக்கப்பள்ளிகளில் 215 ஆசிரியர்களுக்கு நேற்று இரண்டாம் பருவ எழுத்தறிவு எண்ணறிவு, மூன்று நாள் பயிற்சி தொடங்கப்பட்டது.
கோவை: மாணவர்களின் அடிப்படை கல்வி திறனை மேம்படுத்த பொள்ளாச்சியில் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவ எண்ணறிவு, எழுத்தறிவு பயிற்சி நடைபெற்றது. தமிழகத்தில் துவக்க பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக துவக்கப்பள்ளி மாணவர்களை எவ்வாறு கையாள்வது முதல் பருவ கல்வியை எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு எண்ணறிவு, எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ எழுத்தறிவு பயிற்சியின் நோக்கம்:-
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அடிப்படைதிறன் உள்ளிட்ட கல்வித் திறன்களை மேம்படுத்தும் விதமாக கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள 81 தொடக்கப்பள்ளிகளில் 215 ஆசிரியர்களுக்கு நேற்று இரண்டாம் பருவ எழுத்தறிவு எண்ணறிவு, மூன்று நாள் பயிற்சி தொடங்கப்பட்டது.
கொரோனா காலத்துக்கு பிறகு மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கவும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து அறிவுத்திறன்களை மாணவர்கள் பெற்று முழு தகுதியுடைய மாணவர்களாக மாற்றும் நடவடிக்கையாக முதல்வரின் கனவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது முதல் பருவத்துக்கு பின்பு பள்ளிக்கு வருவதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் .வகுப்பறையில் என்ன நடக்கிறது என்பதை பெற்றோர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர் இந்த பயிற்சியில் ஆசிரியர்களுக்கு கையேடும் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகமும் வழங்கப்படும் என்று வட்டார கல்வி அலுவலர் பூம்பாவை தெரிவித்தார்.