கோவையில் இரு வேறு இடங்களில் கல்லூரி மாணவிகள் திடீர் மாயம்; வழக்குபதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை

கோவை சாய்பாபா காலனி மற்றும் சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இரு கல்லூரி மாணவிகள் காணாமல் போனதாக அவர்களது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள கொண்டசாமி நாயுடு வீதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது 18 வயது மகள் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 7-ந்தேதி கல்லூரிக்கு சென்ற அவரது மகள் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது . இது குறித்து அவரது தாயார் ரோஸ்மேரி, சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

அதே போன்று, கணபதிபுதூர் லட்சுமி விநாயகர் ரோட்டை சேர்ந்தவர் நாகேந்திரன். கோவையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்த அவரது 19 வயது மகள், கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார்.

இதுகுறித்து தாயார் வளர்மதி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார் .புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...