சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனையின் போது, ஒரு காரில் ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான அரை டன் குட்கா கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜஸ்தான் உட்பட தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செங்கோடகவுண்டர்புதூர் பிரிவு அருகே சூலூர் காவல் ஆய்வாளர் மாதையின் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றை தணிக்கை செய்த போது, இருக்கையில் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அதனை பிரித்துப் பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தன.
சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ய, காரில் புகையிலை பொருட்களை நடத்திய ராஜஸ்தானை சேர்ந்த கன்பட்ராம் (25), தினேஷ் (20), ஹட்மட்டா ராம் (32) மற்றும் தமிழகத்தைச் சார்ந்த பன்னீர்செல்வம் (27), சரவணகுமார் (47) உள்ளிட்ட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள 78 கிலோ கூல் லிப், 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 28 கிலோ ஹான்ஸ், ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 114 கிலோ விமல், 13 ஆயிரம் மதிப்புள்ள 36 கிலோ கணேஷ், 14,000 ரூபாய் மதிப்புள்ள 46 கிலோ ஸ்வாக், 30,000 ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ டொபாக்கோ பறிமுதல் செய்த போலீசார் TN 57 BK 6190 என்ற டாட்டா ஹாரியர் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மொத்தம் தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட அரை டன் புகையிலை பொருட்களின் மதிப்பு நான்கு லட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் எதிர்வரும் காலங்களில் குட்கா விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.