அஞ்சல் துறை சார்பாக நடைபெற்ற தேசிய அஞ்சல் வாரவிழா 9 முதல் 13 தேதி வரை வால்பாறையில் நடைபெற்றது

வால்பாறையில் நடைபெற்ற அஞ்சலக வார விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம், டிஜிட்டல் திட்டம் போன்ற திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியபடுத்தும் வண்ணம் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.


கோவை: வால்பாறை பகுதியில் தேசிய அஞ்சலக வார விழா 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தேசிய வார விழா நடைபெறும். இதை முன்னிட்டு வால்பாறை துணை அஞ்சலகம் சார்பாக தேசிய அஞ்சலக வார விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.



இந்த பேரணி அஞ்சலகப் பகுதியில் துவங்கி காந்தி சிலை பகுதி வரை சென்று மீண்டும் அஞ்சலகம் வரை விழிப்புணர்வு பேரணியாக நடைபெற்றது.



அஞ்சல் துறையில் திறமிகு திட்டங்களான அஞ்சல் சேமிப்பு திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் பென்ஷன் சேமிப்பு திட்டம், முதியோர் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம், டிஜிட்டல் திட்டம் போன்றவற்றை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இந்நிகழ்வில் பொள்ளாச்சி தெற்கு கோட்டயம் ஆய்வாளர் ஆலோக் சிங் யாதவ் வால்பாறை துணை அஞ்சலகம் கண்காணிப்பாளர் ஜே ஜெயசீலன் மற்றும் துணை அஞ்சலகம் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...