கோவையில் இறப்பிலும் இணை பிரியாமல் இமை மூடிய தம்பதிகள்; ஒரே மேடையில் தகனம்.

சுல்தான்பேட்டை பூராண்டம் பாளையத்தைச் சேர்ந்த ராஜாமணி (65) உடல்நிலை குறைவால் காலை உயிரிழந்த நிலையில், அவரது கணவர் திருமலைசாமி (85) அவர் இறந்த 3 மணி நேரத்தில் துக்கம் தாங்காமல் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சுல்தான்பேட்டை பூராண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 80). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ராஜாமணி ( வயது 65).

நேற்று உடல்நலக்குறைவால் ராஜாமணி காலை 10:30 மணிக்கு அவரது வீட்டில் உயிரிழந்தார். இதனால், திருமலைசாமி, மிகுந்த வேதனையுடன் காணப்பட்டார்.

அவரது மனைவியின் உடல் அருகே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த திருமலைசாமி, காலை முதல் தேம்பி தேம்பி அழுதபடி இருந்துள்ளார்.

பின்னர், திடீரென மயங்கி இருக்கையில் சாய்ந்தவாறு உயிரிழந்தார். ஒரே நாளில் 3 மணி நேரத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த துயர சம்பவம் குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக தான் செல்வார்கள். வியாபாரம் செய்யும் நேரம் தவிர மனைவியை விட்டு பிரியாமல் இருப்பார். இப்போது, இறுதி பயணத்திலும் இணைபிரியாத தம்பதிகளாக ஒன்றாக சென்று விட்டனர் என்று கண்ணீர் மல்க அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

இணைபிரியாத இந்த தம்பதிகளின் உடல் ஒன்றாக வைக்கப்பட்டு, இறுதி அஞ்சலி சடங்குகள் செய்யப்பட்டது.அப்பகுதி மக்கள் அனைவரும் தம்பதியின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பூராண்டம்பாளையம் இடுகாட்டில் ஒரே மேடையில் இருவரது உடலும் வைக்கப்பட்டு அவர்களது மகன்கள் சிவக்குமார், பாலகுமார் தகனம் செய்தனர்.

இணை பிரியா தம்பதிகள் இறப்பிலும் இணை பிரியாது இமை மூடி இறுதிவரை தங்கள் பிணைப்பை பறைசாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சொல்லில் அடங்கா துயரத்தில் ஆழ்த்தியது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...