கோவையில் தீபாவளி போனஸ் கொடுக்காத கடையின் முன் குப்பை கொட்டிய சுகாதார பணியாளர்..!

ஆர் எஸ் புரம் பகுதியில் தீபாவளி போனஸ் கேட்டு கொடுக்காததால் கடையின் முன்பு துப்புரவு பணியாளர் ஒருவர் குப்பைகளை கொட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை ஆர்.எஸ். புரம் ராமச்சந்திரா ரோட்டில் உள்ள தனியார் எல்.இ.டி கடை நடத்தி வருபவர் ஜேம்ஸ். இவரிடம், சுகாதார பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, ஜேம்ஸ் 20 ஆம் தேதிக்கு மேல் வாங்க தருகிறேன் என அந்த தூய்மை பணியாளரிடம் கூறியுள்ளார்.

ஆனால், அதன் பின்னரும், அந்த தூய்மை பணியாளர் தொடர்ந்து ரூ. 500 கேட்டு தொந்தரவு செய்யவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி சுகாதார பணியாளர் ஒருவர் கடை அருகே இருந்த குப்பையை எடுத்து,கடை முன்பு போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் பணம் கொடுக்காத கடை மற்றும் வீடுகள் முன்பு, சுகாதார பணியாளர் சிலர்குப்பைகளைகொட்டிவிட்டு செல்வது வாடிக்கையாகி விட்டது என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தனியார் நிர்வாகங்களிடம் வலுக்கட்டாயமாக போனஸ் கேட்கும் ஒரு சிலதூய்மை பணியாளர்களால், அனைத்துதூய்மை பணியாளர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதால், தவறு செய்பவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரிக்கை வலுத்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...