கோவை சிங்காநல்லூரில் கோவில் அருகே படமெடுத்த நல்ல பாம்பு - பத்திரமாக பிடித்து சென்ற பாம்பு பிடி வீரர்

சிங்காநல்லூர் அடுத்த வெள்ளலூர் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் அருகே இருந்த 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை, பாம்பு பிடி வீரர் சஞ்சய் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக பிடித்துச் சென்று காப்பு காட்டில் விட்டார்.


கோவை: பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு உலகில் எந்த உயிரினத்தின் மீதும் இல்லாத பயம் பாம்பின் மீது இருக்கும். அப்படி சாலைகளிலோ, அல்லது குடியிருப்பு பகுதிகளிலோ, பாம்பை பார்த்தால் அவற்றை அடித்து கொல்லாமல் வனத்துறையினர் அல்லது பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று மக்களிடையே படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விழிப்புணர்வு மக்களிடையே சென்றடைந்துள்ளது என்பதற்கு சான்றாக, கோவை சிங்காநல்லூர் பகுதியில் இன்று நல்ல பாம்பு ஒன்றைப் பார்த்த பொதுமக்கள் அதை துன்புறுத்தாமல், பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளித்து அதை பத்திரமாக மீட்டனர்.

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் பின்புறம் வெள்ளலூர் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மைதானம் அருகில் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று படுத்திருந்தது. அதைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.

பின்னர், அதை துன்புறுத்தாமல் பாம்பு பிடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.



தகவல் அறிந்து வந்த பாம்பு பிடிப்பதில் அனுபவம் கொண்டவரான சஞ்சய், சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார்.



பின்னர், பிடிப்பட்ட பாம்பை பாதுகாப்பாக காப்புக் காட்டில் விடுவதாக கூறி எடுத்து சென்றார்.

எங்கேனும், பாம்பை பார்த்தால் அடிப்பதோ அல்லது அதனை நெருங்குவதோ தவறு, பாம்பு பிடி வீரர்களுக்கு அல்லது வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அவர்களே பாம்பை பத்திரமாக மீட்டு சென்று விடுவார்கள் என்று பாம்பு பிடி வீரர் சஞ்சய் மக்களிடம் தெரிவித்தார்.

கடும் விஷம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...