கடந்த 1995ஆம் ஆண்டு அக்டோபர் 10-ல் இளம்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெய்ஜிங்கில் நடைபெற்ற மாநாட்டின் விளைவாக, ஐ.நா சபையில் கனடா சார்பில் முன்மொழியப்பட்டு, இந்த நாள் உலக பெண் குழந்தைககள் தினமாக ஏற்கப்பட்டது.
இன்று உலக பெண் குழந்தைகள் தினம். உலகெங்கிலும் உள்ள இளம்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தைக் கண்டறிந்து 1995ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் உலக மாநாடு ஓன்று சர்வதேச அளவில் நடைபெற்றது.
இது உலக அளவில் பெண்களுக்கென நிகழ்ந்த முதல் மாநாடு ஆகும். அந்த மாநாட்டில் தான் அக்டோபர் 11ம் தேதி உலக பெண்கள் தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என முதல் முதலில் வலியுறுத்தப்பட்டது.
பின்னர் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்த நாளை தீர்மானமாக நிறைவேற்ற கனடா நாட்டின் சார்பில் முறையாக முன்மொழியப்பட்டது. இதன் விளைவாக, டிசம்பர் 19, 2011 அன்று, ஐ.நா. பொதுச் சபை அக்டோபர் 11, 2012ஐ சர்வதேச பெண் குழந்தை தினத்தின் தொடக்க நாளாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டது.
இந்த நாளில், பெண் குழந்தைகள் குறித்து சமூகத்தில் இருக்கும் பிற்போக்கு எண்ணங்களை போக்கி, ஆரோக்கியமான சமூக மாற்றத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் முழுச் சுதந்திரம் கிடைக்க, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதே நேரத்தில், பெண் குழந்தைகள் ஒவ்வொருவரையும் இந்நாளில் வாழ்த்தி, கவுரவிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் மூலம் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கான சம உரிமையை வழங்க வேண்டும். பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுத்தல் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை முன்னிறுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாக எடுக்கப்படுகிறது.
பெண்களின் சம உரிமை மற்றும் முன்னேற்றத்திற்காக உலக அளவில் இன்றும் போராட்டங்களும், முயற்சிகளும் நடந்து வருகின்றன. பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்பதை குடும்பத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் அனைத்து விதங்களிலும் சமமாக நடத்த வேண்டும். என்பது போன்றான உறுதிகளை நாம் எடுப்போம்.