கோவை சூலூர் அருகே காரில் 130 கிலோ குட்காவை விற்பனைக்காக கடத்திச் சென்ற நபர் கைது

சூலூர் அருகே வாகன சோதனையின் போது, காரில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 130 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்தனர்.


கோவை: கோவையில் குட்கா உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கத்தை அடியோடு ஒழிக்க, மாநகர மற்றும் காவல் துறையினர் ரோந்து உள்ளிட்ட தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சூலூர் பகுதிகளில் போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக TN37DJ3708 என்ற பதிவு எண் கொண்ட கார் ஒன்று வந்துள்ளது.

அப்போது, காரில் சோதனை செய்த போது, காருக்குள் மூட்டை ஒன்றை பதுக்கி வைத்திருப்பதை பார்த்த போலீசார் சந்தேகமடைந்து, மூட்டைகளை அவிழ்த்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த மூட்டையில் செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, காரை ஓட்டிவந்த பள்ளபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரது கார் மற்றும் அதில் இருந்த 130 கிலோ அளவிலான குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போதைப் பொருளில்லா மாவட்டமாக கோவையை மாற்ற பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்பதால், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ஏதேனும் விவரம் தெரிந்தால் பொதுமக்கள் தயங்காமல் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் காக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

தகவல் தெரிவிக்க, கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 94981-81212 என்ற தொலை பேசி எண் மூலமாகவோ அல்லது 77081- 00100 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமாகவும் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...