கோவை வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள் - பரபரப்பு.

வால்பாறை அருகேயுள்ள சின்கோனா உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்கள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக்கூறி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: வால்பாறை அருகில் உள்ளடேன்டீ கழகத்திற்கு உட்பட்ட சின்கோனா, பெரியகல்லார், சின்னகல்லார், ரயான் டிவிசன், பத்தாம்பாத்தி, ஆகிய எஸ்டேட்களை மூடுவதற்கு டேன் டீதலைமை நிர்வாகம் குன்னூர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்ததாக எஸ்டேட் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதை அடுத்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் இல்லை என்று அப்போது வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் இடம் எஸ்டேட்நிர்வாக மேலாளர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இன்று எஸ்டேட் பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்களை எஸ்டேட் நிர்வாகத்தின்தோட்டம் அலுவலர்கள் தொழிலாளர்களை சந்தித்தனர்.

அப்போது, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வு பெறவும், 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குன்னூர், கூடலூர் பகுதியில்உள்ள டேன் டீ நிர்வாகத்திற்கு உட்பட்ட எஸ்டேட் பகுதிகளில் வேலை செய்ய வேண்டும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.



இதை தொடர்ந்து மக்கள் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஊழியர்கள், இந்த எஸ்டேட்டில் 500க்கும் மேற்பட்டோர் நீண்ட காலமாக நாங்கள் இங்கு வேலை செய்து வருகிறோம். எஸ்டேட் மூடப்பட்டால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எஸ்டேட் பகுதியில் அலுவலர்கள் எந்த ஒரு பதிலும் சொல்லாததால் நீண்ட நேரம் கொட்டும் மழையில் தொழிலாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...