மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் - திருப்பூரில் மத்திய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி.

மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், செயல்படுத்த வேண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களில் வருவாய்த்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் முடிவுற்று மக்கள் பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை மத்திய அரசின் திட்ட பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்து வரும் திட்டங்களையும் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும், என்றார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...