கோவையில் குடிபோதையில் அரசு குளிர்சாதன பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு

நேற்று இரவு கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு குளிர்சாதன பேருந்து மீது ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில், போலீசாரின் விசாரணையில் குடிபோதையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் இருந்து சேலம் நோக்கி நேற்று இரவு அரசு குளிர் சாதன பேருந்து ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. இந்நிலையில் பேருந்தானது, ஜி.கே.என்.எம் மருத்துவமனை அருகே கடந்து சென்ற போது மர்ம நபர் ஒருவர் வலதுபுறம் இருந்து கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்ததால், பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.இந்நிலையில், கல் வீச்சு சம்பவம்தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலிசார் பேருந்தின் மீது கல்வீச்சு நடைபெற்றதை குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டனர். அப்போது,, பேருந்து மீது கல்வீசியவர் தினேஷ் என்ற நபர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

மது போதையில் இருந்த தினேஷ், வழியில் இருந்த கல்லை எடுத்து பேருந்து மீதுவீசியுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியபோலீசார்,இது குறித்து தினேஷ் குடும்பத்தாருக்கும் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தினேஷ் குடும்பத்தார் பேருந்து பழுதை சரி செய்து தருவதாக போலீசார் முன்னிலையில் ஒப்புக்கொண்டதால், பின்னர் தினேஷ் விடுவிக்கப்பட்டார்.

திடீரென அரசு பேருந்து மீது ஒருவர் கல் வீசி தாக்கியதால், அச்சம் அடைந்த பொதுமக்கள், போலீசாரின்விசாரணையில் மதுபோதையில் தான்கல் வீசப்பட்டது என்று தெரிய வந்ததுடன் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...