நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும்‌ 8 கோடி மரங்களும் காரணம்‌‌ - தமிழக விவசாய சங்க தலைவர்‌ பாராட்டு

கோவையைச்‌ சேர்ந்த பழங்குடியின மக்கள்‌ மற்றும்‌ விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தின் இரண்டாம்‌ தவணையாக 1 லட்சம்‌ மரங்கள்‌ வழங்கும்‌ விழாவில் தமிழக விவசாயிகள்‌ சங்கத்தலைவர்‌ 'சொல்லேர்‌ உழவன்‌' செல்லமுத்து உரை.



கோவை: காவேரி கூக்குரல்‌ இயக்கமும்‌ கோவை கட்டுனர்‌ மற்றும்‌ ஒப்பந்ததாரர்கள்‌ சங்கம்‌ இணைந்து கோவையைச்‌ சேர்ந்த பழங்குடியின மக்கள்‌ மற்றும்‌ விவசாயிகளின்‌ வாழ்வாதாரதக்திற்காக இரண்டாம்‌ தவணையாக 1 லட்சம்‌ மரங்கள்‌ வழங்கும்‌ விழா இன்று நடைபெற்றது.

அதில் காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ நோக்கம்‌ அடுத்த 12 ஆண்டுகளில்‌ 242 கோடி மரங்கள்‌ நடுவதாகும்‌. அதன்‌ ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் பகுதியின்‌ பசுமைப்பரப்பை அதிகரிக்கவும்‌, நிலத்தடி நீரை மேம்படுத்தவும்‌, விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும்‌ "பசுமை தொண்டாமுத்தூர்‌” என்ற இயக்கம்‌ கடந்த ஆகஸ்ட்‌ மாதம்‌ தொடங்கப்பட்டது.

அதன் முதற்கட்டமாக 1 லட்சம்‌ மரக்கன்றுகள்‌ இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வெறும்‌ இரண்டே மாதங்களில்‌ அந்த இலக்கு அடையப்பட்டது.



அதன்‌ இரண்டாவது தவணையாக அடுத்த 1 லட்சம்‌ மரக்கன்றுகள்‌ வழங்கும்‌ விழா இன்று சீங்கப்பதி கிராமத்தில்‌ நடைபெற்றது.



அதில்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ மாநில கள ஒருங்கிணைப்பாளர்‌ தமிழ்மாறன்‌ அவர்கள்‌ பேசுகையில்‌, "காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ அதன்‌ பணிகளுக்காக ஐநா உள்ளிட்ட பல சுற்றுச்சூழல்‌ அமைப்புகளால்‌ அங்கிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம்‌ முழுவதும்‌ கடந்த 30 வருடங்களாக தொடர்ந்து பொது இடங்களில்‌ மரங்கள்‌ நட்டு வந்தாலும்‌ விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில்‌ பலன்‌ தரும்‌ விதமாக இதனை மாற்றி தீர்வளித்தது சத்குரு அவர்கள்தான்‌. விவசாயிகளின்‌ பொருளாதாரத்தை மேம்படுத்தும்‌ வகையில்‌ மரம்‌ சார்ந்த விவசாயத்தை முன்னெடுத்து விவசாயமும்‌ பொருளாதாரமும்‌ இணைந்தால்‌ மட்டுமே இது விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்திற்கு உதவும்‌ என்றார்‌. அவரின்‌ இந்த வழிகாட்டுதலால்‌, கடந்த மூன்று வருடங்களாக விவசாயிகளின்‌ நிலங்களில்‌ மரங்கள்‌ நடுவதும் அதனால் ஏற்படும் பலனும் பலமடங்கு அதிகரித்துள்ளது. காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ பணிகளால்‌ சுற்றுச்சூழல்‌ மேம்பாடு, பருவநிலை மாற்றம்‌, மண்‌வளம்‌, நதிகள்‌ மீட்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.



காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ தொண்டாமுத்தூரை மாதிரி பகுதியாக உருவாக்கும்‌ நோக்கத்தில்‌ இதே நோக்கத்துடன்‌ உள்ள சமூக இயக்கங்களுடன்‌ இணைந்து கடந்த மூன்று மாதங்களிலேயே 1 லட்சம்‌ மரங்கள்‌ நட்டுள்ளோம்‌" என்றார்‌.

செல்வம்‌ ஏஜன்சீஸ்‌ நிர்வாக இயக்குனர்‌ நந்தகுமார்‌ அவர்கள்‌ பேசுகையில்‌, "கட்டிடங்கள்‌ கட்டிட நிறைய மரங்களை அழித்தாக வேண்டிய நமது வாழ்க்கைச்‌ சூழல்‌ இருக்கிறது. விவசாயத்தின்‌ அபாயகரமான சூழல்‌ குறித்து நாம்‌ திரு தமிழ்மாறன்‌ அவர்களின்‌ உரையில்‌ அறிந்தோம்‌. இவற்றிற்கெல்லாம்‌ ஒரே தீர்வு இந்த மரங்கள்‌ நடுவது மட்டுமே" என்றார்‌.



தமிழக விவசாயிகள்‌ சங்கத்தலைவர்‌ 'சொல்லேர்‌ உழவன்‌' செல்லமுத்து அவர்கள்‌ பேசுகையில்‌, "நாம்‌ நமது தேவைகளுக்காக கோடிக்கணக்கான மரங்களை வெட்டி பயன்படுத்த வேண்டிய சூழல்‌ உள்ளது. மரங்களை வெட்டி சம்பாதிக்கலாம்‌ என்ற எண்ணத்தை மாற்றி மரங்கள்‌ வளர்த்து சம்பாதிப்போம்‌ என்ற எண்ணத்தை விதைத்தது இந்த காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌. சத்குரு அவர்கள்‌ சமீபத்தில்‌ மண்‌ காப்போம்‌ விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு மிகச்சிறப்பான செயலை துவங்கியுள்ளார்‌. உலகம்‌ முழுக்க பருவநிலை மாற்றத்தால்‌ பல பிரச்சினைகள்‌ உருவாகியுள்ளது. இதற்கான ஒரே தீர்வு மரங்கள்‌ நடுவது மட்டுமே. மரங்கள்‌ நடுவது மக்களுக்கான சேவை. மக்களுக்கு என்பது மகேசனுக்கு சேவை செய்வது போலாகும்‌. எனவே இதை செய்துகொண்டிருக்கும்‌ ஈஷாவின்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கத்தினர்‌ சிறப்பான செயலைச்செய்து கொண்டிருக்கிறார்கள்‌. தீபாவளி, பொங்கல்‌, திருமணம்‌ உள்ளிட்ட உங்களின்‌ வீட்டு விஷேசங்களுக்கு மரங்களை நடுங்கள்‌. இப்போது நல்ல மழை பெய்யும்‌ சூழல்‌ உள்ளது. இதற்கு ஈஷா நட்டிருக்கும்‌ இந்த 8 கோடி மரங்களும்‌ ஒரு காரணம்‌ என்று உறுதியாக சொல்லலாம்‌ என்றார். மேலும் அவர் நிரந்தரமற்ற இந்த வாழ்க்கையில்‌ நாம்‌ நடும் மரங்கள்‌தான் நம்‌ பெயர்‌ சொல்லவேண்டும்‌. எனவே இந்த லட்ச மரங்கள்‌ மட்டுமல்ல இன்னும்‌ கோடி மரங்கள்‌ நட வேண்டுமென வாழ்த்துகள்‌” என தனது பாராட்டுகளையும்‌ வாழ்த்துக்களையம்‌ வெளிப்படுத்தினார்‌.

தொடர்ந்து பேசிய அவர் மேலும்‌ இந்த பகுதி மட்டுமின்றி மற்ற பகுதியின்‌ விவசாயிகளுக்கும்‌ மரங்கள்‌ எளிமையாக சென்று சேர்வதை உறுதிப்படுத்தும்‌ வகையில்‌ 30-க்கும்‌ மேற்பட்ட ஈஷா நாற்றுப்‌ பண்ணைகளில்‌ 14 வகைக்கும்‌ மேற்பட்ட டிம்பர்‌ மரக்கன்றுகளை ரூ.3- க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது என்றார். 

பழங்குடி மக்கள்‌ மற்றும்‌ விவசாயிகளின்‌ வாழ்வில்‌ முன்னேற்றத்தை ஏற்படுத்தும்‌ விதமாய்‌ நிகழ்ந்த இந்த விழாவை காவேரி கூக்குரலுடன்‌ இணைந்து கோயமுத்தூர்‌ கட்டுமான மற்றும்‌ ஒப்பந்ததாரர்கள்‌ சங்கம்‌ நடத்தியது. 



கோவை கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் சுவாமிநாதன் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க தலைவர் கு.செல்லமுத்து, கிருஷ்ணா கல்வி குழுமத்தின் நிறுவனத்தின் சார்பாக ஆதித்யா, செல்வம் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனரும், கோவை வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான நந்தகுமார். வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் குமார், CEBACA சமூக பிரிவின் வள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...