கோவையில் மின்னல் வேட்டை: 9 ரவுடிகள் கைது; ரவுடிசம் செய்வோர் குறித்து பொதுமக்கள் தைரியமாக காவல்துறையிடம் தெரிவிக்கலாம் - எஸ்.பி

கோவையில், ரவுடிகள் மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடுவோரை கைது செய்ய மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், 9 ரவுடிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்தும் வகையில், அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில், கடந்த 2 நாட்களாக கோவை மாவட்டத்தில் போலீசார் ரவுடிகள் மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, 88 ரவுடிகள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், 9 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும், ரவுடிசத்தில் ஈடுபட்ட 62 ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களின் மீது நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 17 ரவுடிகளின் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், "கோவை மாவட்டத்தில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரவுடிகள் மீதான இந்த "மின்னல் வேட்டை" தொடரும்.

கோவை மாவட்டத்தில் இதுபோன்ற ரவுடிசம் செய்யும் நபர்கள் குறித்த காவல்துறைக்கு பொதுமக்கள் தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதற்காக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்", என்றார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...