சிமென்ட் விலையின் திடீர் உயர்வுக்கு கண்டனம்: கோவை பொள்ளாச்சி தாலுகா சிவில் இஞ்சினியர்ஸ் சங்கத்தினர் சார் ஆட்சியரிடம் புகார் மனு

திடீர் விலை உயர்வின் காரணமாக தனியார் சிமென்ட் நிறுவனங்கள் போலியான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி லாபம் பார்க்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக குற்றம் சாட்டிய சிவில் இஞ்சினியர்ஸ் சங்கத்தினர், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.


கோவை: கட்டுமானத் துறையில் அத்தியாவசியப் பொருளாக இருக்கும் சிமென்ட்-ன் விலை திடீரென மூட்டைக்கு ரூ.80 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



தனியார் சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமென்ட் விலையை உயர்த்தி இருப்பதாகவும், இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், பொள்ளாச்சி தாலுக்கா சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சங்கத்தினர் இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தினர் கூறியதாவது, இரண்டு மாதங்களுக்கு முன்பு 380 ரூபாயாக இருந்த சிமென்ட், தற்போது 460 ரூபாயாக உயர்த்தி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வரும் தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்களுக்கு வன்மையாக கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறோம்.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தி மீண்டும் பழைய விலைக்கே சிமென்ட் மூட்டைகள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

ஏற்கனவே கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வீடு கட்டுவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த விலை உயர்வு காரணமாக பொறியாளர்கள், கட்டுமான தொழிலை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே சிமென்ட் விலையை குறைக்காத பட்சத்தில் பொதுமக்களோடு இணைந்து பொறியாளர்கள் நாடு முழுவதும் தனியார் சிமென்ட் உற்பத்தியாளர் நிர்வாகத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...