கோவை ஆழியாறு அணையின் மதகுகளை இயக்கும் சிறுவன் - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு

அக்டோபர் 7ஆம் தேதி பரம்பிகுளம் - ஆழியாறு திட்ட தினத்திற்காக அணையின் மதகுகளை சிறுவனை வைத்து திறந்ததாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வரும் நிலையில், துறை அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளனது.


கோவை: பரம்பிகுளம்-ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான ஆழியாறு அணையில் இருந்து சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், கேரளாவிற்கு 7.25 டிஎம்சி தண்ணீர் ஒப்பந்தப்படி வழங்கப்படுகிறது.

பிஏபி திட்டத்தை நினைவு கூறும் வகையில் கடந்த 7ஆம் தேதி பிஏபி தினம் கொண்டாடப்பட்டது. 7ஆம் தேதி பிஏபி திட்டத்தில் உள்ள ஆழியாறு அணை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி இரவு ஆழியாறு அணையில் பணிபுரியும் ஊழியர், சிறுவன் ஒருவரை வைத்து மதகுகளை இயக்கியதாக தகவல்கள் பரவின.

அணையின் மதகுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றி மீண்டும் மூடும் பொழுது பழுதடைந்தது என்றும், இந்நிலையில், மதகுகளை சிறிது நேரம் மூட முடியாத நிலை ஏற்பட்டது என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் அணையின் மதகு பழுது சரிசெய்யப்பட்ட பிறகே மதகுகள் மூடப்பட்டதாகவும், இது தொடர்பான புகைப்படமும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...