மேட்டுப்பாளையம் அடுத்த குட்டையூரில் பதுக்கி வைக்கப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

குட்டையூர் பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட குடிமை பொருள் பாதுகாப்பு பிரிவினர், சுமார் இரண்டரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மாதேஸ்வரன் கோயில் ரோடு பகுதியில் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குடிமை பொருள் பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், கோவை குடிமை பொருள் பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் மேனகா தலைமையில், உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் அடங்கிய காவல்துறையினர் மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் கோயில் பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், மாதேஸ்வரன் கோயில் சாலை குட்டையூர் பகுதியில் உள்ள காலி இடத்தில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கிருந்த50 கிலோ எடை கொண்ட 49 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.



இந்நிலையில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...