கிணத்துக்கடவில் மேற்கு ஒன்றிய பாஜக ஆய்வுக்கூட்டம்

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் முரளி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் பாஜக சார்பில் அந்தந்த ஒன்றிய பகுதிகளில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிணத்துக்கடவு மேற்கு ஓன்றிய பாஜக சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மேற்கு ஒன்றிய தலைவர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் முரளி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.



கூட்டத்தில் அவர் பேசியதாவது, அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்,

வரும் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை பாஜக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், மகேந்திர பிரபு, பொருளாளர் சிவகுமார், முன்னாள் ஒன்றிய தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...