உதகையில் இரண்டாவது சீசன் தொடங்கிவிட்டது. சுற்றுலா பயணிகள் படுகொண்டாட்டமாக உதகை நோக்கி புறப்பிடத் தொடங்கிவிட்டார்கள். தமிழகம் மட்டுமில்லாது பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
உதகை: செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்கள் வந்துவிட்டாலே சுற்றுலா ப்ரியர்களுக்கு மகிழ்வுதான். நமது மலைகளின் அரசி உதகை மலர்களால் செழித்து வரவேற்பாள். இதமான கால நிலையில் வழக்கம் போல் இவ்வாண்டும் நமது உதகை மண்டலம் செழிக்க தொடங்கிவிட்டது. அக்டோபர் 3 ம் தேதி தொடங்கிய உதகையின் இரண்டாவது சீசன் இப்போது அதிகமாக சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தினமும் மலர்களை ரசிப்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்து செல்வதுண்டு உதகையில் இரண்டாம் சீசன் இம்மாதம் துவங்கிய நிலையில் நேற்று இரவு வரை அரசு தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மேலும் புத்துணர்வை கொடுத்துள்ளதாக உதகை மண்டலவாசிகள் தெரிவிக்கிறார்கள்.
தமிழகம் மட்டுமில்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளும் உதகையில் குவிந்துள்ளனர். இவர்கள் பூங்காவில் உள்ள பிரமாண்ட புல் தரையில் ஆடிப்பாடி,விளையாடி,மகிழ்ந்தனர்
காலாண்டு பரிட்சை விடுமுறை,ஆயுத பூஜை,தசரா போன்ற தொடர் விடுமுறை இருந்த காரணத்தாலும், உதகையில் இரண்டாம் சீசனில் நிகழும் இதமான கால நிலைக் காரணமாகவும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 9 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் உதகை தாவரவியல் பூங்காவிற்கு வந்து சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் உதகை படகு இல்லம்,பைன் பாரஸ்ட், தொட்ட பெட்டா,உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களையும் சுற்றிப்பார்த்து சென்றனர்,
இதனால் சுற்றுலாத் பயணிகளை நம்பி தொழில் நடத்தும் உதகை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.