செப்டம்பர், அக்டோதொடர் விடுமுறை காலத்திலே தொடங்கிய இரண்டாம் சீசன்... அழைக்கிறாள் மலைகளின் அரசி....!பர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்கள் வந்துவிட்டாலே சுற்றுலா ப்ரியர்களுக்கு மகிழ்வுதான். நமது மலைகளின் அரசி உதகை மலர்களால் செழித்து வரவேற்பாள்

உதகையில் இரண்டாவது சீசன் தொடங்கிவிட்டது. சுற்றுலா பயணிகள் படுகொண்டாட்டமாக உதகை நோக்கி புறப்பிடத் தொடங்கிவிட்டார்கள். தமிழகம் மட்டுமில்லாது பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.



உதகை: செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்கள் வந்துவிட்டாலே சுற்றுலா ப்ரியர்களுக்கு மகிழ்வுதான். நமது மலைகளின் அரசி உதகை மலர்களால் செழித்து வரவேற்பாள். இதமான கால நிலையில் வழக்கம் போல் இவ்வாண்டும் நமது உதகை மண்டலம் செழிக்க தொடங்கிவிட்டது. அக்டோபர் 3 ம் தேதி தொடங்கிய உதகையின்  இரண்டாவது சீசன் இப்போது அதிகமாக சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

 

தினமும் மலர்களை ரசிப்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்து செல்வதுண்டு உதகையில் இரண்டாம் சீசன் இம்மாதம்  துவங்கிய நிலையில் நேற்று இரவு வரை அரசு தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் ஒரு லட்சம்  சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மேலும் புத்துணர்வை கொடுத்துள்ளதாக உதகை மண்டலவாசிகள் தெரிவிக்கிறார்கள். 

 

தமிழகம் மட்டுமில்லாது  கர்நாடகா, கேரளா உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களில்  இருந்தும் சுற்றுலாப் பயணிகளும் உதகையில் குவிந்துள்ளனர். இவர்கள் பூங்காவில் உள்ள பிரமாண்ட புல் தரையில் ஆடிப்பாடி,விளையாடி,மகிழ்ந்தனர், மேலும் பூக்களின் முன்  செல்பி எடுத்தும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், 

 

காலாண்டு பரிட்சை விடுமுறை,ஆயுத பூஜை,தசரா போன்ற  தொடர் விடுமுறை இருந்த காரணத்தாலும், உதகையில் இரண்டாம் சீசனில் நிகழும்  இதமான கால நிலைக் காரணமாகவும்  கடந்த ஒரு வாரத்தில் மட்டும்  ஒரு லட்சத்து 9 ஆயிரம்  சுற்றுலாப் பயணிகள்  உதகை தாவரவியல் பூங்காவிற்கு  வந்து சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் உதகை படகு இல்லம்,பைன் பாரஸ்ட், தொட்ட பெட்டா,உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களையும் சுற்றிப்பார்த்து சென்றனர், 

 

இதனால் சுற்றுலாத் பயணிகளை நம்பி தொழில் நடத்தும் உதகை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...