நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமிய குழந்தைகளுடனான நபி புகழ்பாடும் பேரணி திருப்பூரில் நடைபெற்றது.

திருப்பூர் பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைமையாளர் இமாம் சையது அகமது மிஷபாஹி தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் "அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேணவேண்டும்" , அமைதியை காக்கவேண்டும் என கோஷங்களை எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.


திருப்பூர்: இன்று இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளாகும். இத்தினத்தை கொண்டாடும் விதமாக வருடாவருடம் அக்டோபர் 9ம்தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது

இஸ்லாமியர்கள் இத்திருநாளை மிலாடி நபி விழாவாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் திருப்பூரில் மீலாது கமிட்டியின் சார்பில் நபி புகழ் பாடும் பேரணி இன்று நடைபெற்றது.



இப்பேரணியை திருப்பூர் பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைமையாளர் இமாம்.சையது அகமது மிஷபாஹி தொடங்கி வைத்தார். அதிபர் அஜீம்பாஷா நாட்டுமக்கள் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்தும், தொழில்கொடி அசைத்தும் துவக்கி வைத்தார்.

இறை தூதர் நபிகள் நாயகத்தின் சிறப்பு பேரணியில் திருப்பூர் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் ஊர்வலமாக வந்தனர்.



பேரணியில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமியர்கள் "அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேணவேண்டும்" ,அமைதியை காக்கவேண்டும் என கோஷங்களை எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.



இந்த நிகழ்ச்சியில் மீலாது கமிட்டியின் தலைவர் சையது மன்சூர்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனைகள் செய்து குழந்தைகள் சமாதான புறாவை பறக்கவிட்டு இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...