கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர். எஸ்.எஸ். பயிற்சி: முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் - மாநகராட்சி ஆணையர்

தனியார் அமைப்புகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி அளிக்க அனுமதி இல்லை எனவும், சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதனிடையே, இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் தேவாங்க பள்ளி சாலையில், கோவைமாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வளாகத்தில், இன்று காலைஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் காக்கி கால் சட்டை அணிந்து பயிற்சி மேற்கொண்டனர்.

அரசு பள்ளி வளாகங்களில் இது போன்ற தனியார் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்ற நிலையில், மாநகராட்சி பள்ளி வளாகத்திலேயே ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடப்பது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறுகையில், கோவை மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிகளும்நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை எனவும், பள்ளி வளாகத்தில் பயிற்சி நடைபெறுவது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பயிற்சி செய்யஅனுமதித்தது குறித்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி மேற்கொண்ட தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் அங்கு சென்றபோது அவர்கள் பயிற்சியை முடித்துவிட்டு பள்ளியின் கேட்டை பூட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மாநகராட்சி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து இன்றுபிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

ஆர் எஸ் எஸ் மூலமாக வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் சேவா தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியில் இருந்த குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றும் வேலையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஈடுபட்டதை திரித்து ஷாக்கா நடைபெற்றதாக தவறான குற்றச்சாட்டை தீக்காவினர் அரசியல் லாபத்திற்காக மேற்கொண்டுள்ளதாக தகவல்.... கோவை முழுவதும் இன்று 23 இடங்களில் இப்படிப்பட்ட சேவா நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...