கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற மணிவிழா பொதுக் கூட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், வழக்கம் போல ஒரு சராசரி பிறந்தநாள் விழாவாக கொண்டாடாமல், கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்வுகளாக இந்த மணிவிழா ஒருங்கிணைக்க வேண்டும். அதன்படி, தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்துவோம் என்ற கருப்பொருளை கொண்டுள்ளோம்.
கோவை: கோவை சிவானந்தா காலனி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மணிவிழா பொதுக்கூட்டம் பறை இசை முழக்கத்துடன் நடைபெற்றது.
இதில், முன்னாள்நிதி அமைச்சர் பா.சிதம்பரம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,
மனிதநேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய தொல். திருமாவளவன்,
வழக்கம் போல ஒரு சராசரி பிறந்தநாள் விழாவாக கொண்டாடாமல்,கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்வுகளாக ஒருங்கிணைக்க வேண்டும் என்று நாம் உயர்நிலை குழுவில் முடிவு செய்தோம். நமக்கு இந்த ஆண்டுக்கான கருப்பொருளை கொடுத்தவர்கள் நம்முடைய மதிப்பிற்குரிய சங்கீகள் தான். சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்பதுதான் நம் பொருள்.
வரும் தேர்தலில் பாஜகவை
தனிமைப்படுத்துவோம் என்ற கருப்பொருளை கொண்டுள்ளோம். இந்த நிகழ்வில் நம்முடைய காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், இந்தியாவின் பக்குவம் நிறைந்த தலைவர் ப. சிதம்பரம் வந்துள்ளது எனக்கு கிடைத்த அங்கீகாரம்.
அவர் தனது துணிச்சலான கருத்தைபதிவு செய்துள்ளார். காந்தியடிகள், அம்பேத்கரின் கருத்தியல் முரணை சுட்டி காட்டியுள்ளார். இது அறிவின் பேராண்மை. இப்படி பேச தெளிவும், துணிவும் தேவை. அவர், அம்பேத்கர் பக்கம் நின்று பேசி உள்ளார். அப்படி என்றால் காந்தியடிகளை குறைத்து பேசவில்லை. காந்திக்கு அம்பேத்கருக்கும் நடைபெற்ற கருத்து மோதல், நாகரீகமான மோதல். வன்முறையில்லாத மோதல்.
இந்த விவாதம் கூர்மை பட வேண்டும்.
நாம் இந்துக்களுக்கு எதிரி என சித்தரிக்கிறார்கள். இந்துத்துவத்தை எதிர்த்தால், இந்துக்களுக்கு எதிரி என திசை திருப்புகிறார்கள். மதத்தை யாரும் கொச்சைப்படுத்தவில்லை. சைவம், வைணவத்தை பற்றி பேச காரணம் நீங்கள் தொடங்கி வைத்த விவாதம். ஏழை, எளிய மக்களின் உணர்வுகளை, மத நம்பிக்கையை உங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறீர்கள்.
மடாதிபதிகள், ஆர்.எஸ்.எஸ் காரர்களை செவிலில் அறைய வேண்டும். இந்தியா நம் நாடு என்ற கருத்து நாட்டின் தேசியம் பேசுவது காங்கிரஸ் கட்சி. பாஜக ,ஆர் எஸ் எஸ் கட்டமைக்கும் தேசியம் மதவெறி தேசியம்.இதற்கு அப்பாவிகளை, கிறிஸ்தவர்களை, இஸ்லாமியர்களை எதிரியாக நிறுத்துகிறார்கள். தமிழ் தேசியம் என்பது மொழிவழி தேசியம். இந்து ராஷ்டிரம் என்பதை விட கம்யூனல் ராஷ்ட்ரம் என்பது தான் சரி.
பட்டேலுக்கு சிலை வைக்க நீங்கள் யார். காந்தியை சிறுமைப்படுத்த விரும்புகிறார்களா..?
சாவக்கரை போற்றுகிறார்கள்,
காந்திக்கும் மலர் தூவுகிறார்கள்.
சமூகப் பிரிவினைவாதம் தான் ஆர்எஸ்எஸ் கோட்பாடு. ஆர் எஸ் எஸ் யின்முதல் எதிரி அம்பேத்கர். மதச்சார்பற்ற கொள்கை கொண்டதற்கு காரணம் அரசியல் சாசனம்.
நீண்ட நெடிய விவாதத்திற்கு பிறகு வந்தது தான் அரசியலமைப்புச் சட்டம். ஒற்றை மனிதன் ஏந்திய ஆயுதம் தான் இந்த அரசியல் சாசனம். சனாதனத்தை அடித்து நொறுக்குவது அரசியல் அமைப்புச் சட்டம். அதுதான் அவர்களுக்கு தடை. சோசலிஸ்ட், செக்யூலர் என்று இந்திராகாந்தி சாசனத்தில் அமைத்துள்ளார். இஸ்லாத்தை, கிறிஸ்துவத்தை விமர்சிக்கிறாயா என்கிறார்கள். அதில் இந்த தீண்டாமை இல்லை.
அம்பேத்கர் இந்துவாக சாக மாட்டேன் என்று கூறியுள்ளார். இன்னொரு வாழ்க்கை முறையை தேர்வு செய்கிறார்கள் என்றால், அந்த வாழ்க்கை முறையில் எவ்வளவு வலி இருந்திருக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டாமா? திருமாவளவன் சொல்லியா மதம் மாறுகிறார்கள். அவர்கள் எந்த வலியுடன் மதம் மாறினர். சுய விமர்சனம் செய்யும் துணிச்சல் உள்ளதா..? சாதி வர்ணம் எல்லாம் மறந்து விடுங்கள் என ஆர் எஸ் எஸ் தலைவர் தெரிவித்துள்ளார். அவர் அந்த சாதி ஒடுக்கு முறையில்
வாழ்ந்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.
இந்தியாவில் ஆரியம் திராவிடம் என்ற இரண்டு பிரிவு தான் இருந்தது. இந்து பெயரில் தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் பார்பனர்கள்.
அதனால் தான், சனாதனம் என்கிறார்கள். மோகன் பகவத்தே, சாதியும் வர்ணமும் மறக்க கூடியது அல்ல, அழித்தொழிக்க கூடியது. பார்ப்பனர்களுடன் தொட்டுக் கொடுக்கும் சங்கராச்சாரி. தமிழிசைக்கு நடந்தது என்ன.? தமிழிசையை சங்கராச்சாரியார் மடாதிபதியாக ஆக்க முடியுமா..? அல்லது பொன்னார் அவர்களை மடாதிபதி ஆக்க முடியுமா.
வன்னியர் சமூகத்தில் பிறந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று திருமாவிற்கு உந்து சக்தியாக உள்ளனர். ஐஏஎஸ் கோச்சிங் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் அளவிற்கு திருமாவளவன் உள்ளார். வடக்கு வேல்முருகன், இங்கு ஈஸ்வரன் என பலரும் திருமாவை மெச்சுகின்றனர்.
தமிழ்நாட்டின் எல்லாப் பிரிவு மக்களிடத்திலும் அன்பை பெற்றவர் திருமா. தமிழ்நாடு காங்கிஸை விட, திமுகவை விட சிறந்தவர் திருமா. வடக்கிலும், கொங்கிலும், தெற்கிலும் சாதி சண்டைகள் இல்லை. அதற்கு திருமா தான் காரணம். திருமா இருக்கும் கூட்டணியுடன் வரும் காலத்தில் ஒன்றாக இருக்க விரும்புவதாக எனது முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
சாதியத்தின் திமிர்களை மாற்றியவர் திருமா. அடுத்த விழா கொண்டாடும் பொழுது இந்திய அளவில் உச்சபட்சத்தில் இருப்பீர்கள். திருமா நினைத்தால் உச்சபட்சத்தில் இருக்கலாம், என்று பேசினார்.