கோவையில் பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்ட தினம்: வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்த ஆழியார் அணை

பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்ட தினத்தையொட்டி, நேற்றைய தினம் ஆழியார் அணை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு முழுவதும் ஜொலித்தது, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.


கோவை: கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சியை போக்கவும், அப்பகுதி மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும், பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்டம் (பிஏபி) கொண்டு வரப்பட்டது.

1961 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அப்போதய தமிழகம், கேரளா என இரு மாநில அரசுகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்டத்தில் மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிபள்ளம், ஆழியாறு, திருமூர்த்தி மற்றும் அப்பர் ஆழியார், உப்பார் உள்ளிட்ட அணைகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ளன. இதில், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணை பெரும் பங்கு வகுக்கிறது.



இந்நிலையில், இதை நினைவு கூறும் வகையில் தமிழக அரசின் சார்பில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.



இதன் ஒரு பகுதியாக பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்டத்தின் முக்கிய அணையான 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையின் 11 கண் மதகுகள் மற்றும் அணை முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் மின் ஒளியில் ஜொலித்தது.



இதில் குறிப்பாக எட்டு மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு மின் ஒளியில் நீர் வெளியேற்றப்பட்டது.



இது அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...