திருப்பூரில் காப்பகத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - முதல்வர் நிவாரண தொகையை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்

ஸ்ரீ விவேகானந்தா சேவாலயா குழந்தைகள் காப்பகத்தில் இரவு உணவு அருந்திய மூன்று குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சர் அறிவித்தபடி ரூபாய் 2 லட்சத்தை வருவாய் கோட்டாட்சியர் இன்று அவர்கள் குடும்பத்தாரிடம் வழங்கினார்.



திருப்பூர்: நேற்று முன்தினம் திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் என்ற குழந்தை காப்பகத்தில் இரவு உணவு உண்ட 14 குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 11 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்த தனமான போக்கால் குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த காப்பகத்தை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த சிறுவர்களான - ஆதீஷ் (11), மாதேஷ் (14), பாபு (10) ஆகிய 3 மாணவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக ஆதீசின் தாயார் பூங்கொடிக்கு இன்று மாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரி நாதன் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...