திருப்பூர் காப்பகத்தில் மூன்று குழந்தைகள் பலியான சம்பவம்: செய்தித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உடல் நிலை குறைவுக்கு உண்மையான காரணம் தெரியவரும் என்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலை திருமுருகன்பூண்டி ரிங்ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் என்ற குழந்தைகள் காப்பகத்தில் நேற்று இரவு உணவிற்கு பின்னர் மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 11 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தற்போது சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை திருப்பூர் அரசு மருத்துவமனையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சந்தித்துஅவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தது, சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஅமைச்சர் மு.பெ.சாமிநாதன், சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிருந்தால் 3 பேரின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம். சிகிச்சையில் உள்ள 4 மாணவர்களுக்கு மட்டும் இன்னும் காய்ச்சல் குறையாத நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எஞ்சிய சிறுவர்கள் நல்லமுறையில் வீட்டுக்கு செல்லக்கூடிய நிலையில் உள்ளனர்.

உயிரிழந்த 3 சிறுவர்களின் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் தான், உணவில் ஏற்பட்ட கோளாறா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்பது தெரியவரும். உணவில் தான் பிரச்சினை என அனுமானத்தின் மூலம் முதல் கட்டமாக தெரியவருகிறது.

சம்பவம் குறித்து விசாரிக்கசமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை முதல்வர் அனுப்பி உள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...