கிணத்துக்கடவில் மளிகை கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு

கிணத்துக்கடவு பகுதியில் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில், சோதனை மேற்கொண்டனர். புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்தனர்.



கோவை: கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை மீது வழக்கு பதிவு செய்தனர்.

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் மளிகை கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டார். சோதனையில், சிங்கராம்பாளையம் பகுதியில் செல்வராஜ் வயது (50) என்பவரது மளிகை கடையில் சட்ட விரோதமாக பதுக்கி விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதே போல் வடபுதூரில் உள்ள ஜேம்ஸ் செல்வன் (40) என்பவரது மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தியதில் அங்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட் வைத்திருந்த இருவர் மீதும் கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...