கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்புக் குழு தலைவர் ஆய்வு

கோவைக்கு வந்துள்ள நீதியரசர் முனைவர். ப. ஜோதிமணி தலைமையிலான குழுவினர் வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையம் உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு கொள்ளவுள்ளனர்.


கோவை: திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவைக்கு வந்துள்ள கண்காணிப்பு குழுவின், தலைவர் நீதியரசர் முனைவர். ப. ஜோதிமணி தலைமையிலான குழுவினர் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே உள்ள குப்பை தரம்பிரிக்கும் மையம், உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு கொள்ளவுள்ளனர்.



இன்று, முதற்கட்டமாக வெள்ளலூர் குப்பை கிடங்கிற்குச் சென்ற குழு தலைவர் நீதியரசர் ஜோதிமணி, அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிக்கும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதை தொடர்ந்து அங்குள்ள மண் புழு உரம் தயாரிக்கும் மையம், மியாவாக்கி அடர்வனம் பகுதிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். வெள்ளலூர் குப்பை கிடங்கினால் அப்பகுதிகளில் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் தொடர் தீ விபத்துகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றி செல்வன், துணை ஆணையர் மோ.ஷர்மிளா ஆகியோர் சென்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...