வார்டு எண் 60: ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்‌ ரூ.22 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ ஆய்வகத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

உப்பிலிபாளையம் கூட்டுறவு நகரில் இன்று ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் மு.பிரதாப் பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகர ஆணையாளர் மு. பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் வார்டு எண்.60க்கு உட்பட்ட உப்பிலிபாளையம்‌ கூட்டுறவு நகரில்‌ தூய்மைப் பணியாளாகள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனையடுத்து, அப்பகுதி மக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.



பின்னர்‌, அப்பகுதியிலுள்ள மழைநீர்‌ வடிகால்களில்‌ எண்ணை பந்துகளை கொண்டு டெங்கு கொசுக்கள்‌ உற்பத்தியவதை தடுக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ ஆய்வு செய்து, பொதுமக்களிடம்‌ குடிநீர் விநியோகம்‌ குறித்து கேட்டறிந்தார்‌.



அதனைத் தொடர்ந்து, உப்பிலிபாளையம்‌, கூட்டுறவு நகரில்‌ உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்‌ ரூ.22 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டுவரும்‌ ஆய்வகத்தை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமான பணியினை தரமானதாகவும்‌, விரைவாகவும்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ முத்துராமலிங்கம்‌, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தரராஜன்‌, சுகாதார அலுவலர்‌ முருகா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...