கருமத்தம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தை முந்தி சென்ற தனியார் நிறுவன ஊழியருக்கு அடி உதை...!- இருவர் மீது வழக்குப்பதிவு.

கருமத்தம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் முந்திச் சென்ற விஜயகுமார் என்பவரை தாக்கிய கே.ராக்கிபாளையம் பகுதியை சேர்ந்த மோகன்குமார் (35) மற்றும் கனகராஜ் (31) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கருமத்தம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் முந்தி சென்ற தனியார் நிறுவன ஊழியரை துரத்திச் சென்று தாக்குதல் ஈடுபட்ட 2 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (27). இவர் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் தனது இருசக்கர வாகனத்தில் கருமத்தம்பட்டியில் இருந்து கே.ராக்கிபாளையம் நோக்கிச் சென்றுள்ளார்.

அப்போது, அவருக்கு முன்பு 2 இளைஞர்கள் 2 இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை விஜயகுமார் முந்தி சென்றுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்தஇளைஞர்கள் விஜயகுமாரை முந்தி செல்ல முயற்சி செய்துள்ளனர்.

அப்போது, ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு இளைஞர்விஜயகுமாரை துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளார்.

இதனையடுத்து, கீழே விழுந்தஇளைஞர் எழுந்து சென்று, பின்னர் இருவரும் சேர்ந்து விஜயகுமாரை தாக்கி அவரது இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்துள்ளனர்.

இதுகுறித்து விஜயகுமார் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் விஜயகுமாரை தாக்கிய கே.ராக்கிபாளையம் பகுதியை சேர்ந்தமோகன்குமார் (35) மற்றும் கனகராஜ் (31) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...