ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து; இருவர் பலி

கோவை பொள்ளாச்சி அருகே ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்தான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.



கோவை: கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கதிரவன் என்பவர் தனது காரில் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி சுற்றுலா சென்று விட்டு மீண்டும் கோவைக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அவரது கார் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே வந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் பலமாக மோதியது.



இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சேக் முகமது, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த இதயத்துல்லா என்பவர் என இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

இதில், சம்பவ இடத்திலேயே ஷேக் முகமது பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த இதயத்துல்லாவை போலீசார் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் இதயத்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கதிரவன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆழியார் சோதனைச்சாவடியை கடந்த ஒரு சில மீட்டர் தொலைவில், இரு சக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...